வைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலக புகழ்பெற்ற மருத்துவமனை, விரிவான குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:



* வைரஸ் ஒரு உயிரினமல்ல. ஆனால் லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்ட ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ) ஆகும். இது கண், நாசி அல்லது சளிச்சுரப்பியின் உயிரணுக்களால் உறிஞ்சப்படும்போது மரபணு குறியீட்டை மாற்றுகிறது.

* வைரஸ் ஒரு புரத மூலக்கூறு என்பதால், அது தானாகவே சிதைகிறது. சிதைவு நேரம் என்பது வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.

* வைரஸ் மிகவும் உடையக்கூடியது; அதைப் பாதுகாக்கும் ஒரே விஷயம் கொழுப்பின் மெல்லிய வெளிப்புற அடுக்கு ஆகும். அதனால் தான் எந்தவொரு சோப்பாக இருந்தாலும் அதுவே சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனெனில் சோப்பின் நுரை, கொழுப்பை நீக்குகிறது. (அதனால்தான் 20 விநாடிகளுக்கு மேலாக சோப்பினால் நுரைகள் வரும்வரையில் கைகளை தேய்க்க அறிவுறுத்தப்படுகிறது) கொழுப்பு அடுக்கைக் கரைப்பதன் மூலம், புரத மூலக்கூறு சிதறடிக்கப்பட்டு தானாகவே உடைகிறது.