உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது: மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில், பலரும் மறுவாழ்வு மையங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு, 21 நாள் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. எந்தவொரு மனிதனும், தன்னிடம் உள்ள பழக்கத்தை கைவிட அல்லது பழகிக்கொள்ள 21 நாள் போதும் என்பது உளவியல் ரீதியானஉண்மை. சிகிச்சை முடிந்தபின் மதுவின் மீது வெறுப்பு ஏற்பட துவங்கும். இதற்கிடையில், 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்பது போன்ற சில அமைப்பினர், அவர்களை மதுபழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட செய்ய தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கும்.இதன்மூலம், குடிநோயாளிகள், எனப்படும், மதுவுக்கு அடிமையானவர்கள், உடல் மற்றும் மனரீதியாக தயாராகி, மது பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது