சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது

து அருந்தாததால், பலருக்கு, கைகால்நடுக்கம், கோபம், போன்றவை ஏற்படும். இதனால், அவர்களது குடும்பத்தில், அமைதி, சந்தோஷம், இருக்காது. சிலர் உயிரை கூட மாய்த்து கொள்கின்றனர். மதுபழக்கத்தில் இருந்துவிடுபட விரும்புவோருக்காக ஆங்காங்கே மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. அங்கு, மருத்துவ சிகிச்சையோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய மறுவாழ்வுமையங்கள், நகர்ப்புறங்களில் மட்டுமே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், சமூக அக்கறையுள்ள தன்னார்வ அமைப்புகளும் இணைந்து, குடிநோயாளிகளை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு, மறுவாழ்வு வழங்கும் மையங்களை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் செயல்படும் மருத்துவமனைகளில், இதற்காக மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.